Cinema

190 நாடுகள்… 17 மொழி… ஒரே சுருளி – ஜகமே தந்திரம் படக்குழுவால் வெளியிடப்பட்ட மாஸ் update

ஜகமே தந்திரம் படத்தின் குழு புதிய போஸ்டரை ஒன்றையும் வெளியிட்டத்துடன் , முக்கிய update றையும் கொடுத்துள்ளது.

பேட்ட படத்தை அடுத்ததாக கார்த்திக் சுப்புராஜ் இன் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் தான் ‘ஜகமே தந்திரம்’. ஹீரோவாக தனுஷ் நடித்துள்ள இப்படத்தில், அவருக்கு ஜோடியாக நடிகை ஐஸ்வர்யா லட்சுமி மற்றும் சஞ்சனா நடராஜன் போன்றோர் நடித்துள்ளனர். இந்த படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகரான ஜேம்ஸ் காஸ்மோ முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையில் அமைத்துள்ள இப்படம் வருகின்ற ஜூன் 18-ந் தேதி அன்று நேரடியாக OTT தளத்தில் வெளியாக உள்ளது.

இந்த நிலையில், ஜகமே தந்திரம் படத்தின் குழு புதிய போஸ்டர் வெளியிட்டுள்ளதை , தொடர்ந்து முக்கிய அப்டேட்டையும் ஒன்றையும் வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படம் OTT -யில் 190 நாடுகளில் வெளியாக உள்ளதாம்.

அத்துடன் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம், கன்னடம், பிரெஞ்ச், ஜெர்மன், இந்தோனேசியன் , இத்தாலியன், பொலிஷ், போர்ச்சுகீஸ்,ஸ்பேனிஸ் கேஸ்டிலியன், பிரேசிலியன், ஸ்பேனிஸ் நியூட்ரல், தாய், மற்றும் வியட்நாமீஸ் போன்ற 17 மொழிகளில் வெளியிடப்பட உள்ளதாக அப்போஸ்டரில் வெளியிட்டுள்ளனர் . இத்தனைக்காலம் நடிகர் தனுஷ் நடித்துள்ள படங்களிலேயே இத்தனை மொழிகளில் வெளியாகும் முதட்படம் இதுவே ஆகும் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *