Cinema

பிரபல நடிகர் ஒருவருக்கு வில்லியாக மாறும் நடிகை சிம்ரன்!

முன்னணி நடிகைகளுள் ஒருவராக வலம் வந்து தற்போது ரீ என்ட்ரி கொடுத்து வரும் நடிகை தான் சிம்ரன், தற்போது ரிலீஸ் ஆக இருக்கும் தமிழ் திரைப்படம் ஒன்றில் பிரபல நடிகர் ஒருவருக்கு வில்லியாக நடிக்க இருக்கிறார்.

விஷாலின் இரும்புத்திரை மற்றும் சிவகார்த்திகேயனின் ஹீரோ போன்ற படங்களை இயக்கியவர் தான் பி.எஸ்.மித்ரன். இவரின் அடுத்த படைப்பாக நடிகர் கார்த்தியை வைத்து “சர்தார்” என்னும் படத்தை இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியானது.

இப்படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக ராசி கண்ணா மற்றும் ரஜிஷா விஜயன் போன்றோர் நடிக்க இருக்கிறார்கள். இந்த நிலையில் நடிகை சிம்ரன் இப்படத்தில் வில்லி கதாப்பாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாண வண்ணம் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *