நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் பிரிந்துவிட்டதாக பேச்சப்பட்டு வந்த நிலையில் அவர்கள் தனி விமானம் மூலம் கொச்சிக்கு ஜோடியாக சென்றதை பார்த்த ரசிகர்கள் ஆறுதல் அடைந்தனர் .

நடிகை நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் சுமார் 5 ஆண்டுகளுக்கும் மேலாக காதலித்து வருகிறார்கள். அவர்கள் திருமணம பந்தத்தில் இணைந்து கொள்ள வேண்டும் என்பது தான் ரசிகர்களின் விருப்பமாக இருக்கிறது . நடிகை நயன்தாரா தன் வாழ்க்கையில் நடந்த பல கசப்பான நிகழ்வுகளை கடந்து இப்போது அவர் யாரும் தொடமுடியாத உயரத்தில் இருக்கிறார் .ஆகவே எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் நயன்தாராவுடன் திருமண பந்தத்தில் இணையுங்கள் என்று நயன்தாரா ரசிகர்கள் விக்னேஷ் சிவனிடம் கருத்துக்கள் தெரிவித்தவண்ணம் உள்ளனர் .
இந்த நிலையில் நடிகை நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் பிரிந்துவிட்டதாக பல வதந்திகள் வெளியாகி தீயாக பரவியது. அதை அவர்கள் இருவருமே கண்டுகொள்ளவில்லை..

இவ் வதந்திகளை பொய்யாக்கும் வண்ணம் நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் தனி விமானத்தில் கொச்சிக்கு சென்றிருக்கிறார்கள். நயன்தாரா கையை பிடித்து விமானத்தில் இருந்து இறக்கிவிட்டார் விக்னேஷ் சிவன்
மேலும் அவர்கள் கைகோர்த்து நடந்து சென்றபோது எடுக்கப்பட்ட புகைப்படங்களும் வைரலாக பரவின இதன் பிறகே வெளியான வதந்திகள் அணைத்தும் பொய்யானது என உறுதியானது.
அடுத்து நடிகை நயன்தாரா அல்போன்ஸ் புத்ரன் இயக்கத்தில் ஃபஹத் ஃபாசில் நடிக்கும்
பாட்டு படத்தில் நடிக்கிறார். அந்த படத்தின் ஷூட்டிங்கிக்காகத்தான் சென்றிருக்கிறார்.
காதலிக்கு ஒரு சப்போர்டாக இருப்பதட்கே விக்னேஷ் சிவனும் கூட சென்றிருக்குறார் . நடிகை நயன்தாராவும் , விக்னேஷ் சிவனும் அவரவர் படங்களில் பிசியாக இருந்து கொண்டு இருக்கிறார்கள் . இருப்பினும் நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் இந்த ஆண்டே திருமண பந்தத்தில் பார்க்க ஆசைப்படுகிறார்கள் அவரது ரசிகர்கள்.