Cinema Unknown Facts

செய்திவாசிப்பாளராக இருந்து அதன் பின்னர் சின்னத்திரையில் பிரபலமான நடிகைகள்.

தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளராக இருந்து ரசிகர்களிடையே பிரபலமானவர்களாக மாறியவர்கள் அதிகமானவர்கள் உள்ளனர் .

அந்த வகையில் இப்போது செய்தி வாசிப்பாளராக இருந்து பின்னர் சின்னத்திரை மற்றும் பெரிய திரையில் பிரபலமானவர்கள் பற்றி தான் பார்க்கப்போகிறோம் .

  1. ப்ரியா பவானி ஷங்கர்

இவர் ஆரம்பத்தில் புதிய தலைமுறை தொலைக்காட்சியில் செய்திவாசிப்பாளராக இருந்து பின்னர் கல்யாணம் முதல் காதல் வரை என்னும் சீரியல் மூலம் அதிக ரசிகர்களை கவர்ந்தார் .

மேலும் தற்போது தமிழ் சினிமாவில் பல ஹிட் திரைப்படங்களில் கொடுத்து மிகவும் பிரபலமான நடிகையாகவும் மாறி உள்ளார்

  1. அனிதா சம்பத்

அனிதா சம்பத் சன் நியூஸ் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்த போதே அதிக பிரபலமாக இருந்தார் . அதனை தொடர்ந்து இவர் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு மேலும் பல ரசிகர்களை தன்பக்கம் கவர்ந்து கொண்டார் .

  1. சரண்யா துராடி

இவரும் ஆரம்பத்தில் புதிய தலைமுறை தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக 4 வருடங்கள் பணிபுரிந்து விட்டு அதன் பின்னர் விஜய் டிவி சீரியலின் மூலம் பிரபலமாக தொடங்கினார் .

அத்துடன் இவர் நெஞ்சம் மறப்பதில்லை, ஆயுத எழுத்து மற்றும் ரன் போன்ற சீரியல்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

  1. லாஸ்லியா

ஆரம்பத்தில் இவர் இலங்கையில் செய்தி வாசிப்பாளராக இருந்து பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தமிழகத்தில் பெரியளவு ரசிகர்களை பெற்றுக்கோண்டார் .

அதுமட்டுமில்லாமல் தற்போது இவர் ஒரு சில படங்களிலும் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *