தமிழ் சினிமாவில் 365 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்த 10 படங்கள் இதுதான்

தமிழ் சினிமாவில் பல படங்கள் சரித்திரம் படைக்க கூடிய அளவிற்கு வெற்றிகரமாக ஓடி உள்ளது .

அந்த அளவிற்கு 365 நாட்களை தாண்டி வெற்றிகரமாக ஓடிய படங்களை பற்றி பார்ப்போம்.

tamil actors

அதாவது ஒரு வருடங்களைத் தாண்டி ஓடிய படம் முதலாவதாக பார்க்கப்போகிற படம் பயணங்கள் முடிவதில்லை.

எந்தவித அனுபவமும் இல்லாமல் யாரிடமும் உதவி இயக்குனராக கூட இல்லாமல் ஆர் சுந்தரராஜன் அவர்களின் இயக்கத்தில் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படம் பயணங்கள் முடிவதில்லை.

இந்த படத்தை மைக் மோகன் மற்றும் பூர்ணிமா பாக்யராஜ் ஆகியோர் நடித்துள்ளனர் .

1982 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 26ஆம் நாள் வெளியாகி கிட்டத்தட்ட 437 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்தது.

அடுத்ததாக பார்க்கப்போவது ஹரிதாஸ் தியாகராஜ பாகவதர் மற்றும் டி ஆர் ராஜகுமாரி ஆகியோர் நடிப்பில் வெளியான ஹரிதாஸ் திரைப்படம் கிட்டத்தட்ட மூன்று வருடங்களுக்கும் மேல் ஓடி சாதனை படைத்தது.

அதாவது மூன்று தீபாவளிகள் கடந்து ஓடிய திரைப்படம் என்றால் அது ஹரிதாஸ் என்று கூறலாம்.

அடுத்தபடியாக பார்க்கப்போவது நெஞ்சத்தை கிள்ளாதே மோகன் மற்றும் சுகாசினி நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டடித்த திரைப்படம் நெஞ்சத்தைக் கிள்ளாதே .

திரைப்படம் 365 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்தது.

அடுத்தபடியாக பார்க்கப்போவது மூன்றாம் பிறை பாலுமகேந்திரா இயக்கத்தில் வெளியான மூன்றாம் பிறை படத்தில் கமலஹாசன் மற்றும் ஸ்ரீதேவி நடித்து உள்ளனர்.

இந்த படத்தில் கமல்ஹாசனுக்கு தேசிய விருதும் இவர்கள் இருவருக்கும் தமிழ்நாடு தேசிய விருதும் கிடைத்தது.

அதிலும் குறிப்பாக இறுதியாக ரயில்வே காட்சியில் ஸ்ரீதேவி பார்த்து இவர் கூறும் வசனம் எல்லாம் ரசிகர்களால் அவ்வளவு எளிதில் மறக்க முடியாது.

என்று கூறலாம் திரைப்படமும் ஒரு வருடங்களை கடந்து ஓடி சாதனை படைத்தது .

tamil actors

அடுத்தபடியாக பார்க்கப்போவது கிளிஞ்சல்கள் மோகன் மற்றும் பூர்ணிமா பாக்யராஜ் நடிப்பில் வெளியான கிளிஞ்சல்கள் திரைப்படம் .

டி ராஜேந்தர் இயக்கி இருந்தார் மோகனுக்கு மிகப்பெரிய அளவில் பெரும் புகழை பெற்றுக்கொடுத்த திரைப்படம் அது மட்டுமல்லாமல் இப்படம் ஒரு வருடத்துக்கு மேல் ஓடி சாதனை படைத்தது.

அடுத்தபடியாக பார்க்கப்போவது ஒரு தலை ராகம் சினிமாவில் ஒரு தலை ராகம் படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது என்பதை ராஜேந்திரன் இயக்கியிருந்தார்.

1980ஆம் ஆண்டு மே மாதம் இரண்டாம் நாள் வெளியாகி இப் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

இப்படத்தை ராஜேந்திரன் ஷங்கர் போன்றோர் நடித்திருந்தனர் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது ஒரு வருடத்திற்கும் மேல் ஓடி சாதனை படைத்தது.

அடுத்தபடியாக கிழக்கேபோகும்ரயில் இந்த திரைப்படமும் ஒரு வருடத்துக்கும் மேல் ஓடி சாதனை படைத்தது.

அடுத்தபடியாக கரகாட்டக்காரன் கங்கை அமரன் இயக்கத்தில் ஒரு வருடத்திற்கும் மேல் ஓடியது .

அதன் பின்பு பிரபு மற்றும் குஷ்பு நடித்த சின்னத்தம்பி திரைப்படம் வாசு இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம் கிட்டத்தட்ட 175 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்தது .

அடுத்தபடியாக வசந்த மாளிகை திரைப்படம் 750 நாட்களுக்கும்.

பாட்ஷா திரைப்படம் ஒரு வருடத்துக்கும் சந்திரமுகி திரைப்படம் 864 நாட்களும் ஓடி சாதனை படைத்தது.

தற்போது தமிழ் சினிமாவில் இத்திரை படங்களின் சாதனைகளை முறை அடிக்க எந்த திரைப்படமும் வர வில்லை என்றுதான் கூற வேண்டும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *