
தனது முதலாவது படமான தீனா வில் ஆரம்பித்து , ரமணா, கஜினி, 7ஆம் அறிவு போன்ற வெற்றி படங்கள் மூலம் பிரபலமானவர் இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ்.
இருந்தாலும்இவரது இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் 2012ஆம் ஆண்டு வெளியான துப்பாக்கி திரைப்படம் இந்தியளவில் பெரும் புகழை இவருக்கு பெற்று தந்தது.

அதன்பின் தொடர்ந்த தளபதி விஜய்யுடன் இணைந்து “சர்கார் மற்றும் கத்தி” என இரு சூப்பர்ஹிட் வசூல் சாதனை படங்களை இயக்கினார்.
ஆனால் கடந்த ஆண்டு இவர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜனி நடிப்பில் வெளியான தர்பார் திரைப்படம், எதிர்பார்த்த அளவு வரவேற்பை பெற தவறியது .

இந்த நிலையில் இவரின் மொத்த சொத்து மதிப்பு குறித்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது இவரின் மொத்த சொத்து மதிப்பு சுமார், ரூ. 140 கோடி என தெரிவிக்கின்றனர்.
இது அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை என்றாலும், திரை வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.