Cinema

நம்ம காஜலா இது ! என்னம்மா மாறிட்டாங்கய்யா !

காஜல் அகர்வாலின் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்களை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர் ரசிகர்கள் . அதற்கு காரணம் அப்புகைப்படத்தில் காஜல் எலும்பும், தோலுமாக இருப்பது தான். காஜலின் உடம்புக்கு ஏதாவது பிரச்சனையா என அறியாது ரசிகர்கள் குளம்பி உள்ளனர் .

தமிழ், தெலுங்கு, மற்றும் இந்தி படங்களில் நடித்து வரும் காஜல் அகர்வால் பலருக்கும் பிடித்த ஒரு நடிகயாக இருக்கிறார் . அதுமட்டுமில்லாமல் பல ஹீரோக்கள், தயாரிப்பாளர்கள், இயக்குநர்களுக்கும் கூட பிடித்த நடிகையாவார் .

திருமணம் செய்து கொண்ட பிறகும் கூட தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார் நடிகை காஜல் .

அடிக்கடி போட்டோஷூட் மூலம் தன் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார் நடிகை காஜல். இந்த நிலையில் கடைசியாக வெளியிடப்பட்ட புகைப்படங்கள் ரசிகர்களை அதிர்ச்சிக்கு ஆழ்த்தியுள்ளது

அதற்கு காரணம் அப்புகைப்படத்தில் அவர் மிகவும் ஒல்லியாக இருப்பது தான்.

ஏற்கனவே காஜல் ஒல்லியாகத்தான் இருப்பர் ஆனால் மேலும் ஒல்லியானது ரசிகர்களுக்கு அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது .

காஜலுக்கு கடந்த 2020ம் ஆண்டு அக்டோபர் மாதமே திருமணம் நடந்தது. இதைனை அடுத்து அவருக்கு விரைவில் குழந்தை பிறக்க வேண்டும் என்று காஜலின் தங்கை நிஷா அகர்வால் அவர்கள் ஆசய்ப்படுகிறார் .

இது குறித்து நிஷா அவர்கள் கூறியதாவது

சகோதரி காஜல் விரைவில் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அதற்கு சுயநலமான காரணங்கள் பல உள்ளது. சீக்கிரமாக தாயாக வேண்டும் என்று அவருக்கு திருமணமான நாளில் இருந்து கூறி வருகிறேன்.

காஜல் குழந்தை பெற்றுக்கொள்வதில் தாமதம் ஏற்பட்டால் அந்த பிள்ளைக்கும், எனது மகனுக்கும் இடையிலான வயது வித்தியாசம் அதிகமாக இருக்கும். அதனால் என் மகனுக்கும் , காஜலின் பிள்ளைக்கும் இடையிலான நெருக்கம் குறைந்துவிடும் . அத்துடன் அவனுக்கு ஏற்கனவே மூன்று வயதாகிவிட்டது. அதனால் காஜலும், கவுதமும் மிக விரைவில் பெற்றோராக வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *