Cinema

நடிகை கரீனா கபூர் சீதையாக நடிக்க எதிர்ப்பு

தமிழ், தெலுங்கு மாற்றும் இந்தி ஆகிய 3 மொழிகளிலும் ராமாயண கதையை 3D தொழில் நுட்பத்தில் சினிமா படமாக இயக்குகின்றனர் .இத்திரைக்கதையின் கதையை சீதை பார்வையில் நகர்வது போல் அமைத்துள்ளனர் . இந்த ராமாயணத்தின் சீதை கதாபாத்திரத்திட்காக பல நடிகைகள் பரிசீலிக்கப்பட்டு இறுதியில் பிரபல இந்தி நடிகையான கரீனா கபூரை தேர்வு செய்து இருப்பதாக தகவல் தெரிவித்துள்ளனர் .

சீதையாக நடிக்க நடிகை கரீனா கபூர் இந்திய மதிப்பில் ரூ.12 கோடி சம்பளம் கேட்டபதாக கூறப்படுகிறது. இது மிகவும் அதிக தொகை என்பதால் கரீனா கபூர் கேட்ட தொகையை கொடுத்து அவரை இப்படத்திற்கு ஒப்பந்தம் செய்வதா? அல்லது வேறு நடிகையை பார்த்து தெரிவதா ? என்ற யோசனையில் படக்குழுவினர் உள்ளனர்.

இந்நிலையில், சீதை வேடத்திற்கு கரீனா கபூர் நடிக்க எதிர்ப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது. சீதையாக நடிக்க கரீனா கபூருக்கு தகுதி இல்லை என்றும் அவரை இப்படத்தில் இருந்து புறக்கணிக்க வேண்டும் எனவும் வதந்திகள் குவிந்த வண்ணம் உள்ளன .

அத்துடன் இந்து கடவுளை மதிக்காத நடிகை கரீனாவை சீதையாக நடிக்கவிடக் கூடாது. தனது வாழ்க்கையில் ராமாயணத்தை படித்தே இருந்திருக்க மாட்டார் நடிகை கரீனா ! என்றெல்லாம் பதிவுகள் வெளிப்படுத்தி வரும் ரசிகர்கள், அந்த கதாபாத்திரத்தில் நடிகை கங்கனா அல்லது யாமி கவுதமை நடிக்க வைக்குமாறு கருத்துக்கள் தெரிவித்துள்ளனர் . இந்த சம்பவம் இந்தி பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *