Cinema

ஷூட்டிங் முடிந்தும் இன்னும் இந்தியா திரும்பாத தனுஷ்: காரணம் இதுதானா !

தி கிரே மேன் ஹாலிவுட் படத்தின் ஷூட்டிங் முடிந்தும் நடிகர் தனுஷ் இன்னும் இந்தியா திரும்பாமல் இருப்பதாகவும், அதற்கு காரணம் அவரது மாமனாரான நடிகர் ரஜினி என்றும் தகவல் வெளியானவண்ணம் உள்ளது .

நடிகர் ரஜினிக்கு சிறுநீரகத்தில் பிரச்சனை ஏற்பட்டதை தொடர்ந்து கடந்த 2016ம் ஆண்டில் அமெரிக்காவில் இருக்கும் பிரபல மருத்துவமனை ஒன்றில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடந்தது அனைவரும் அறிந்ததே . அதன் பின் அவர் அடிக்கடி அமெரிக்கா சென்று மருத்துவ பரிசோதனை செய்து கொள்வதை வழக்கமாக கொண்டிருந்தார் .

ஆனால் கொரோனா வைரஸ் பிரச்சனை ஏற்பட்டதன் காரணமாக ரஜினியால் அமெரிக்காவுக்கு செல்ல தடை ஏற்பட்டது . அத்துடன் “அண்ணாத்த” பட வேலையும் அவருக்கு இருந்தது. இந்த நிலையில் அண்ணாத்த படத்தின் வேலைகளை முடித்துவிட்ட அமெரிக்காவுக்கு செல்ல முடிவு செய்தார் நடிகர் ரஜனி .

ஆனால் கொரோனா வைரஸ் பிரச்சனை மீண்டும் தொடர்ந்ததன் காரணமாக அவர் தனி விமானம் மூலம் அமெரிக்கா செல்ல முடிவு செய்தார் . இது தொடர்பாக நடிகர் ரஜனி மத்திய அரசிடம் சிறப்பு அனுமதி பெற்றிருப்பதாகவும் தகவல் கசிந்துள்ளது .

இதனை தொடர்ந்து அவர் நாளை இரவு அமெரிக்காவுக்கு செல்ல தீர்மானித்துள்ளார். அத்துடன் தி கிரே மேன் ஹாலிவுட் படத்தில் நடிக்க தனுஷ் அவரது மனைவியுடன் அமெரிக்கா சென்றார்.

கடந்த 4 மாதங்களாக தனுஷ் அமெரிக்காவில் தான் படப்பிடிப்பில் இருக்கிறார். இந்த நிலையில் அப்படம் முடிந்துவிட்டதாம். இருந்தும் ரஜினி சிகிச்சைக்கு வரும்போது அவருக்கு துணையாக இருப்பதட்காக தனுஷும் அவரது மனைவி ஐஸ்வர்யாவும் அமெரிக்காவிலேயே இருக்கிறார்களாம்.

ரஜினி வழக்கமாக ஐஸ்வர்யா தனுஷ் உடன் தான் அமெரிக்கா செல்வார் என்பது குறிப்பிடத்தக்கது. ரஜினி வழமையாக அமெரிக்காவில் மூன்று வாரங்கள் இருப்பாராம். இதற்கு இடையே தனுஷ் நடித்திருக்கும் ஜகமே தந்திரம் எனும் படம் OTT ல் நாளை வெளியாகவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *