Cinema

பிரபல ரியாலிட்டி நிகழ்ச்சி ஓன்றை தமிழில் தொகுத்து வழங்க இருக்கும் நடிகர் சிம்பு. மாஸ் அப்டேட் இதோ!

கொரானா தொற்று இச் சமயத்தில் பல கவலைக்கிடமான விஷயங்கள் நடந்துள்ளதன . இது நாம் அறிந்தவிடயமே! . ஆனால் நடிகர் சிம்பு பல பாசிட்டிவ் விஷயங்களை செய்துள்ளார் என சொல்லலாம். தனது உடல் பருமனை குறைத்தார். அதுமட்டுமில்லாமல் தனது குணத்திலும் மாறுதல்கள் பல கொண்டுவந்துள்ளார் என்கின்றனர் அவரை பற்றி தெரிந்தவர்கள்.

நடிகர் சிம்புவின் ஈஸ்வரன் படம் ரிலீசுக்கு பின் ‘மாநாடு’ மற்றும் ‘பத்து தல’ என அடுத்தடுத்து பல படங்கள் உள்ள இந்த நிலையில் நடிகர் சிம்பு international நிகழ்ச்சியான Survivor 2021 ஷோவை தொகுத்து வழங்க ஒப்பந்தம் கொண்டுள்ளதாக தகவல்கள் கசிந்த வண்ணம் உள்ளது . இதுவரை அந்த நிகழ்ச்சி 40 season வரை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது .

இந்த நிகழ்ச்சியை பொறுத்தவரை 16 போட்டியாளர்களை ஒரு தீவு போன்ற சூழலில் கொண்டு சென்று விட்டுவிடுவார். அங்கு அவர்களுக்கு டாஸ்க் கொடுக்கப்பட்டு , எலிமினேஷன் நடக்கும். இறுதியில் எலிமினேஷன் பின் எஞ்சி இருக்கும் கடைசி நபர் தான் வெற்றியாளர் என அறிவிக்கப்படுவார் . சுமார் 90 – 100 நாட்கள் இந்த நிகழ்ச்சி நடைபெறும் .

ஏற்கனவே 2012 இல் சமீர் கோச்சர் என்பவர் தொகுத்து வழங்க ஒரு சீசன் பிலிப்பைன்ஸ் தீவில் ‘Survivor India ‘ எனும் பேரில் நடந்துமுடிந்தது .அடுத்து இம்முறை நடிகர்கள் தனுஷ், சிவகார்த்திகேயன் மற்றும் சிம்புவிடம் பேச்சு வார்த்தைகள் நடந்தன. அதுல் நடிகர் சிம்பு தரப்பிலிருந்து ஓகே கிடைத்துவிட்டது . இந்த வெர்ஷனில் சினிமா மற்றும் டிவி பிரபலங்கள் தான் போட்டியாளர்கள் என கூறப்படுகிறது .

ஆக பிக் பாஸ் நிகழ்ச்சியில் கமல், master chef நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி போல survivor நிகழ்ச்சியில் சிம்பு பற்றிய மேலும் தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பாக்கப்படுகிறது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *