Unknown Facts

கோலா விளம்பரத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்த காற்பந்து விளையாடுவீரர் ரொனால்டோ.

பத்திரிகையாளர் சந்திப்பில் கோகோ – கோலா பாட்டில்களை கொஞ்சம் தள்ளி வைத்து அந்த இடத்தில் தண்ணீர் போத்தல்களை வைத்ததால் கோலா நிறுவனத்திற்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

உலக கால்பந்து வீரர்களில் முக்கியமான ஒருவராக திகழ்ந்து வருகிறார் கிறிஸ்டியானோ ரொனால்டோ. கடந்த காற்பந்தாட்ட போட்டிகளில் நடப்பு சாம்பியனான கிறிஸ்டியானோ ரொனால்டோ தலைமையிலான போர்ச்சுகல் ஹங்கேரி அணியும் மோதிக்கொண்டனர் .

இந்த போட்டி நடப்பதட்கு முன்பாக காலையில் வழக்கமான பத்திரிகையாளர் சந்திப்பும் நடந்தது. யூரோ கோப்பையின் முக்கிய ஸ்பான்சர் கோக்க-கோலா என்பதனால் இரண்டு கோலா பாட்டில்கள் பத்திரிகையாளர் சந்திப்புகளில் பேட்டியளிப்பவருக்கு முன்பாக வைக்கப்படுவது வழக்கம். ஆனால், கிறிஸ்டியானோ ரொனால்டோ தனக்கு முன்னாள் இருந்த கோக்க-கோலாவின் பாட்டில்களை பார்த்தவுடன் அதனை எடுத்து கீழே மறைத்துவிட்டு தண்ணீர் பாட்டிலை கையில் எடுத்து ‘’தண்ணீர் குடியுங்கள்’’ என்று கூறியபடி தன்முன்னால் அப்போத்தல்களை வைத்தார் .

60 ஆண்டுகளுக்கும் மேலாக யூரோ கோப்பையின் முக்கிய ஸ்பான்சராக இருக்கும் கோக்க-கோலாவின் பிராண்டை அவமதிக்கும் வண்ணம் ரொனால்டோ செயல்பட்டுவிட்டார் என்பதால் ரொனால்டோக்கு எதிராக யூரோ கோப்பை அமைப்பு அபராதம் விதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது . ரொனால்டோவின் இந்த செயல் காரணமாக கோக கோலாவின் ஷேரின் மதிப்பானது சடுதியாக குறைந்தவண்ணம் உள்ளது .

இந்த நிகழ்வால் கோலா நிறுவனத்திற்கு இந்திய ரூபாய் மதிப்பில் 29,337 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால், இதில் முக்கிய குறிப்பு என்னவென்றால் கோலாவை எதிர்க்கும் ரொனால்டோ ஏற்கனவே கோலா நிறுவனத்திட்டக்காக நடித்தவர் தான்.

இதே போல தான் தமிழ் சினிமாவில் நடிகர் விஜய்யும் கோலா விளம்பரத்தில் நடித்துவிட்டு கத்தி படத்தில் கோலா நிறுவனத்திற்கு எதிராக சில வசனங்கள் பேசி இருப்பார். தற்போது இந்த ரெண்டு நிகழ்வையும் ஒப்பிட்டு பல மீம்கள் சமூகவலையத்தளங்களில் உலா வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *