Cinema Unknown Facts

இந்தியன் 2 படத்தில் நடிக்கும் பாக்யலடிச்சுமி சீரியல் நடிகை

தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் வெவ்வேறு சீரியல்கள் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்று வருகிறது. அதனை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சி படங்களில் தலைப்பில் அடுத்தடுத்து சீரியல்களை வெளியிட்டு வெற்றியை கண்டு வருக்கின்ற நிலையில் பாக்கியலட்சுமி என்ற சீரியல் கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் ஒளிபரப்பாகி வருகிறது.

இத் தொடரில் ஜெனிபர் என்ற கதாபாத்திரத்தில் குடும்ப குத்து விளக்காக நடித்து வரும் நடிகைதான் திவ்யா கணேஷ். அதுமட்டுமில்லாமல் லட்சுமி வந்துச்சி, சுமங்கலி போன்ற பல தொடர்களிலும் நடித்துள்ளார். ஆனால், இவருக்கு மிகப்பெரிய வரவேற்பை ஏற்படுத்தி கொடுத்தது பாக்கியலட்சுமி தொடர் மட்டுமே . இந்த தொடரில் இவரது நடிப்பிற்கு கிடைத்த பரிசாக தற்போது இவருக்கு இந்தியன் 2 படத்தில் நடக்கும் வாய்ப்பும் கிடைத்துள்ளது. ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியான இந்தியன் படத்தின் இரண்டாம் பாகமானது தற்போது உருவாகி வருகிறது .

இந்த படத்தில் நடிகையாக காஜல் அகர்வாலும் ,ஏனைய கதாபாத்திரங்களாக பாபி சிம்ஹா, சித்தார்த், பிரியா பவானி ஷங்கர் என்று பலர் நடித்து வருகின்றனர். சமீபத்தில் இந்த படத்தில் நடிப்பது குறித்து திவ்யா கணேஷ் கூறியது “இந்த படத்தில் முதலில் நடிக்க எனக்கு வாய்ப்பு வந்தது. இந்த படத்தில் நான் ஒரு சிறிய ரோல் தான் பண்ணபோகிறேன் என்று நினைத்தேன் ஆனால் படப்பிடிப்பிற்கு போன பின்னர் தான் தெரிந்தது நான் பாபி சிம்ஹாவின் மனைவியாக நடிக்கப்போகிறேன்” என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *