
நடிகர் ஆர்யா மற்றும் நடிகை சாயிஷா நடிப்பில் கடந்த மார்ச் மாதத்தில் வெளியான படம் தான் டெடி. சக்தி சவுந்தரராஜன் இயக்குணராகவும் இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்தும் இருந்தார். கே.இ.ஞானவேல்ராஜா அவர்கள் ஸ்டூடியோ கிரீன் சார்பாக இப்படத்தை தயாரித்திருந்தார். இப்படத்தில் இடம்பெறும் டெடி என்கிற பொம்மை கதாபாத்திரம் குழந்தைகள் பலரை ஈர்க்கும் வண்ணம் அமைக்கப்பட்டிருந்தமையால் இப்படத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது.
இந்த நிலையில் , அடுத்ததாக டெடி படத்தின் 2-ம் பாகம் உருவாக்கபட உள்ளதாக நடிகர் ஆர்யா அவர்கள் தெரிவித்துள்ளார். இயக்குனர் சக்தி சவுந்தரராஜன் டெடி இரண்டாம் பாகத்துக்கான அடுத்தகட்ட வேலைகளில் ஈடுபட்டுள்ளதாகவும், இப்படத்தில் நடிக்க நடிகர் ஆர்யா அவர்கள் ஆவலோடு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார் .

நடிகர் ஆர்யா அடுத்தடுத்து நடிப்பதற்காக சுந்தர் சி இன் அரண்மனை 3, விஷாலுடன் எனிமி மற்றும் பா.இரஞ்சித்தின் சார்பட்டா பரம்பரை போன்ற படங்கள் உள்ளதை அடுத்து இந்த மூன்று படங்களும் படப்பிடிப்பு முடிந்து பார்வைக்கு வரப்போகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.