Cinema

அனுமதி கிடைக்காமையினால் தமது முடிவை மாற்றிய ‘வலிமை’ படக்குழு

அஜித் நடிப்பில் உருவாகிக்கொண்டிருக்கும் வலிமை படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பானது முடிந்துவிட்ட நிலையில் இன்னும் ஒரு சில சண்டை காட்சிகள் மட்டுமே எஞ்சியுள்ளது.

நடிகர் அஜித் , எச்.வினோத் கூட்டணியில் உருவாகும் வலிமை படத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து உள்ளார் . போனி கபூர் தயாரிக்கும் இப் படத்தில் பாலிவுட் நடிகையான ஹூமா குரேஷி கதாநாயகியாக நடிக்கிறார். இவர் தமிழில் ரஜினி உடன் ‘காலா’ படத்தில் ஏற்கனவே நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது . இதில் வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயா நடிக்கிறார்.

இதன் எஞ்சியுள்ள சண்டை காட்சியினை சுவிட்சர்லாந்து நாட்டில் படமாக்க திட்டமிட்டிருந்தனர். முழு படப்பிடிப்பும் இந்த காட்சியை படமாக்கியதும் முடிந்துவிடும்.

ஆனால் கொரோனா அச்சுறுத்தலின் காரணமாக , வலிமை படக்குழு சுவிட்சர்லாந்து செல்ல முடியாமல் இருக்கின்றனர் . கொரோனா விதிமுறைகளின் காரணமாக அனுமதி கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. எனவே இச் சண்டைக் காட்சிகளை டெல்லி மற்றும் ராஜஸ்தானில் படமாக்கலாமென படக்குழுவினர் ஆலோசிப்பதாக தகவல்கள் வெளியாநாவண்ணம் உள்ளண .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *