பப்ஜி மதன் மீது வந்த புகார்கள் தொடர்பாக சென்னை கமிஷனர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு, மற்றும் சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதன் என்பவர் தான் வைத்திருந்த யூ டியூப் சேனல்களில் ஊடாக தடை செய்யப்பட்ட பப்ஜி விளையாட்டின் மூலம் சிறுவர்களையும் மற்றும் பப்ஜி பிரியர்களையும் தவறான பாதைக்கு கொண்டுசெல்வதாக புகார் எழுந்தது. அதே நேரத்தில் மதன் தன்னுடைய தொலைபேசியின் ஊடக பல இளம்பெண்களிடம் ஆபாசமான வார்த்தைகளை பேசுவதும் தெரிய வந்தது. இதுதொடர்பாக புகார்கள் அதிகரித்தவண்ணம் இருந்தநிலையில்
சென்னை சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிவும் செய்தனர். தற்போது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவில் , சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், பல நாட்களாக தலைமறைவாக இருந்த பப்ஜி மதனை தர்மபுரியில் வைத்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.இதனை அடுத்து மதனை இன்று இரவுக்குள் சென்னைக்கு அழைத்து வருவார்கள் என எதிர்பாக்கப்படுகிறது .

ஏற்கனவே மதனின் மனைவியை (கிருத்திகா) போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.